உள்நாடு

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியைகள் நாளை!

(UTV | கொழும்பு) –

கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் நாளை ராஜகடலுவில் உள்ள ரோமன் கத்தோலிக்க மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளது. தற்போது அரச அமைச்சரின் சடலம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள தற்காலிக மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், நேற்று உடல் கொண்டு வரப்பட்டது முதல், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமான அரசியல்வாதிகள், நண்பர்கள் மற்றும் பொது மக்கயள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதேவேளை, இந்த வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியின் இறுதிக் கிரியைகள் கண்டி – ஹதெனிய – மரவணகொட பொது மயானத்தில் இன்று இடம்பெறவுள்ளன.

அத்துடன், இராஜாங்க அமைச்சரின் சாரதியின் தொலைபேசியும் விசாரணைக்காக பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதவான் துசித தம்மிக்க நேற்று உத்தரவிட்டுள்ளார். ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அவரை நீதவான் பரிசோதித்த பின்னரே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 283 ஆக உயர்வு

அக்கினியில் இருந்து மீண்ட 45 சடலங்கள் அடக்கம்

குறைந்தது 70 வீத வாக்களிப்பையே எதிர்பார்க்கலாம் – மஹிந்த