(UTV | கொழும்பு) –
ஓக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பாலஸ்தீனத்திற்கான ஐநா அமைப்பின் பணியாளர்களும் உள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கான நிதியை அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது.
ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலில் தனது அமைப்பை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர் என்ற விபரங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது என பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன குறிப்பிட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிற்கு எதிராக தனது அமைப்பின் எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டனர் எவ்வகையான தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற விபரங்களை ஐநா அமைப்பு வெளியிடவில்லை. இந்நிலையில் அமெரிக்கா கனடா போன்று அகதிகளிற்கான பாலஸ்தீன அமைப்பிற்கான நிதிஉதவியை இடைநிறுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியா இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பணியாளர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் முழுமையான விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அவுஸ்திரேலியா வரவேற்றுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්