உள்நாடு

முஸ்லிம் காங்கிரசின் மனு திங்கள் விசாரணைக்கு!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்றத்தில் கடந்த ஜனவரி 10ஆம் திகதி கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய பயங்கரவாத தடைச் சட்டமூலத்திற்கு எதிராக 36 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோர் வெள்ளிக்கிழமை உயர்நீதி மன்றத்திற்கு வந்திருந்தனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாக்கல் செய்திருக்கும் SC/SD/27 /2014. இலக்க மனு திங்கட்கிழமை (29) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது அவர்கள் வாதாடவுள்ளனர். பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய தலைமையில், ஐவர் அடங்கிய நீதியரசர் குழாமினால் பிரஸ்தாப வழக்கு விசாரணை தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை விட ஆபத்தான பல்வேறு விடயங்கள் அரசாங்ம் கொண்டுவந்துள்ள இந்த புதிய திருத்தச் சட்டத்தில் அடங்கியுள்ளதாக பல தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தடுப்பூசிகளை தெரிவு செய்வதில் காத்திருக்க வேண்டாம்

பாடசாலைகள் மீளத் திறக்க தீர்மானம் இல்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கலந்துரையாடல் இன்று