உள்நாடு

அதிகரிக்கப்படும் அதிபர்களுக்கான கொடுப்பனவு!

(UTV | கொழும்பு) –

அதிபர்களுக்கான கொடுப்பனவை 9000 ரூபாவால் அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் நியமிக்கப்பட்டுள்ள அதிபர் சேவையின் தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் ஊடாகவே குறித்த குழு நேற்று அமைச்சரிடம் அறிக்கையை கையளித்துள்ளது.

பேராசிரியர் குணபால நாணயக்கார தலைமையிலான குழு, முன்னாள் பணிப்பாளர் நாயகங்களான எம்.ஏ.தர்மதாச, பத்மா, சிறிவர்தன, முன்னாள் பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித, ஓய்வுபெற்ற கணக்காளர் எஸ். டபிள்யூ. கமகே அதன் உறுப்பினர்களாக பணியாற்றினார். இக்குழு ஆறு முக்கிய அம்சங்களில் பரிந்துரை செய்துள்ளது.

16,000 இற்கும் மேற்பட்ட உத்தியோகத்தர்களைக் கொண்ட அதிபர் சேவையில் தரம் ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் தரங்களில் உள்ள அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் உப அதிபர்களின் சேவை மேம்பாடு மற்றும் பாடசாலை அமைப்பின் புதிய தேவைகளைக் கருத்திற்கொண்டு உயர் தர அதிபரை உருவாக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பள திருத்தம் மற்றும் சம்பள முரண்பாடுகளை நீக்குதல், பிரதான கொடுப்பனவை 6,000 ரூபாயிலிருந்து 15,000 ரூபாவாக அதிகரிப்பு, தொடர்பாடல் பயணச் செலவுகள், அரசாங்க அதிகாரிகள் பெறும் வாகனங்கள் மற்றும் வீடுகள் போன்ற பல சலுகைகளுக்கான சலுகைகள் மற்றும் அதிபர்களுக்கான விசேட கொடுப்பனவுகள் இந்தக் குழுவின் பரிந்துரைகளில் அடங்கும்.

அமைச்சரவையின் அங்கீகாரம், சேவை அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அமைச்சின் சுற்றறிக்கைகள் மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் ஊடாக இந்தக் குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தாயகத்திற்கு 5 இலட்சம் சினோஃபார்ம் வந்தடைந்தன

நகர சபையாக மாறியது சாய்ந்தமருது – வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

ரிஷாதின் மைத்துனர் துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்த யுவதி இன்னும் கன்னிப்பெண் [VIDEO]