(UTV | கொழும்பு) –
இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் உருவாகியுள்ள நிலையில், சீன ஆய்வுக் கப்பலை தமது துறைமுகத்தில் நிறுத்துவதற்கு மாலைத்தீவு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை உலகரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் மாலைதீவில் உள்ள இந்திய இராணுவத்தை திரும்பப் பெறுமாறு இந்தியாவிற்கு மாலைதீவு அரசாங்கம் வலியுறுத்தி இருந்தது. இந்நிலையில் சீனாவிற்கு சொந்தமான சியாங் யாங் ஹோங் 3 என்ற சீன கப்பலை மாலத்தீவில் நிறுத்த சீன அரசாங்கம் அனுமதி கோரியிருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் சீன ஆய்வுக் கப்பல் மாலத்தீவு கடற்பகுதியில் எந்த ஆய்விலும் ஈடுபடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மாலத்தீவில் உள்ள மாலி துறைமுகத்தில் அடுத்த மாதம் 8ஆம் திகதிக்கு பின்னர் குறித்த சீன கப்பல் நங்கூரமிடும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්