உள்நாடு

தென்னிந்திய நடிகைகள் வருகை – பதிலளித்த ஜீவன்

(UTV | கொழும்பு) –

அண்மையில் ஹட்டனில் நடைபெற்ற, தேசிய தைப்பொங்கல் நிகழ்விற்கு குறைந்தளவு அரசாங்க நிதியே செலவிடப்பட்டது எனவும் அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் நிதி ஒதுக்கீடுகள் வரையறுக்கப்பட்டவை எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார். தேசிய தைப்பொங்கல் விழா நிகழ்வில் தென்னிந்திய நடிகைகள் பங்கேற்றமை குறித்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கியிருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய தேசிய நிகழ்வுகளுக்கு செலவிடப்படும் தொகைகளுடன் ஒப்பீடு செய்யும் போது மிகவும் குறைந்தளவு பணமே செலவிடப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செலவு மிகுந்த ஆடம்பர களியாட்டமாக இந்த நிகழ்வு நடத்தப்படவில்லை எனவும் செழுமையான கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

விருது வென்ற தென்னிந்திய நடிகைகள் அழைத்து வரப்பட்ட விடயத்தை சிலர் அற்பமான விடயமாக விமர்சனம் செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.எனினும் அது அற்பமான விடயமல்ல எனவும் சமூகத்தை வலுவூட்டும் நோக்கில் அழைத்து வரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடுடன் காணப்படும் நீண்ட கால உறவுகளின் அடிப்படையில் தாம் நடிகைகளை அழைத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் மீதான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் நடிகைகள் இலங்கை விஜயம் செய்திருந்தனர்.நடிகைகள் தங்களது உரைகளில் அர்த்தபூர்வமான பல விடயங்களை எடுத்துரைத்தனர்.பெண்களை வலுவூட்டல், பிள்ளைகளின் பாடசாலை கல்வி போன்றவற்றை அவர்கள் தங்களது உரைகளில் வலியுறுத்தியதாக அமைச்சர் ஜீவன் தெரிவித்துள்ளார்.

சிலர் பெண் ஆளுமைகளை மலினப்படுத்தும் வகையில் கருத்து வெளியிடுவது வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தைப்பொங்கல் விழா அனைத்து சமூகங்களின் மீதான அரசாங்கத்தின் கரிசனையை வெளிப்படுத்தும் வகையிலானது என அவர் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அடுத்த ஆண்டில் நடைமுறைக்கு வரஉள்ள புதிய பாடசாலை சட்டம்!

பஸ், ரயில் சேவைகள் தொடர்பான அறிவிப்பு

சீனாவில் இருந்து 14 மில்லியன் சினோபார்ம் இலங்கைக்கு