வணிகம்

இலங்கைக்கு இன்று முதல் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று விடுக்கப்பட்டடிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இன்று காலை தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதில் விதித்திருந்த தடை இதற்கமைவாக தற்பொழுது முற்றாக நீக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 5 ஆயிரம் கோடி ரூபாவிற்கும் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த வரிச் சலுகை 2021ம் ஆண்டுவரை வழங்க முடியும் என்று இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் டுங் லாய் மார்ஹூ நம்பிக்கை தெரிவித்தார்.

இது தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டில் ஐரோப்பாவிற்கான இலங்கையின் ஏற்றுமதி பெறுமதி 260 கோடி யூரோக்களாகக் காணப்பட்டது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பிய சந்தைகளை இலக்காகக் கொண்டதாகும்.

இந்த வரிச்சலுகையினால் குறைந்த பட்ச அளவில் இலங்கைக்கான வருமானம் 300 கோடி ரூபாவினால் அதிகரிக்கும் என்று சுட்டிக்காட்டினார்.

Related posts

உரங்களை வழங்க முறையான வழிமுறை

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுப்பு

சுற்றுலாப் பயணிகளுக்கு இணையத்தளமூலம் ஈ-நுழைவாயில் அனுமதி சீட்டு