உள்நாடு

செங்கடலிற்கு கப்பலை அனுப்ப தயாராகவுள்ளோம்- கடற்படை பேச்சாளர்

(UTV | கொழும்பு) –

அரசாங்கம் பச்சைக்கொடி காட்டி அனுமதி வழங்கியதும் கடற்பாதைகளை ஹெளத்திகிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக செங்கடலிற்கு கப்பலை அனுப்ப கடற்படை தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

செங்கடலிற்கு கப்பலை அனுப்புவது குறித்துஇன்னமும் உயர்மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றனஎனினும் நாங்கள் தயாராகவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எந்தநேரத்திலும் கப்பலை அனுப்ப தயாராகவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் முடிவடைந்ததும் திகதி தீர்மானிக்கப்பட்டதும் நாங்கள் கப்பலை அனுப்புவோம் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கும் கடற்படை தளபதி உட்பட்டவர்களிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் பின்னர் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனிமைப்படுத்தப்பட்ட மேலும் சில பகுதிகள்

திரிபோஷ உற்பத்தி இடைநிறுத்தம் : சிறுவர்கள் போசாக்கின்மையால் அவதி

இன்று நள்ளிரவு முதல் ரைஸ், கொத்து விலை குறைப்பு

editor