(UTV | கொழும்பு) –
அதிகளவு போதைப்பொருள் பாவித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் சாவகச்சேரி – மட்டுவில் பகுதியைச் சேர்ந்த தனபாலசிங்கம் சிந்துஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் போதைப்பொருள் வழக்கு ஒன்றுடன் தொடர்புடையவர் என்ற ரீதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் கடந்த 19ஆம் திகதி விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட நபருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடற்கூற்று பரிசோதனைகளை மேற்கொண்ட சட்ட வைத்திய அதிகாரி திரு.பிரணவன் உயிரிழந்த நபர் அதிகளவான ஹெரோயின் பாவித்தமையால் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්