உள்நாடு

சிறீதரனுக்கு வாழ்த்து தெரிவித்த – சுமந்திரன் எம்.பி

(UTV | கொழும்பு) –

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவில் வெற்று பெற்று புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனுடன் தான் ஒன்றாக சேர்ந்து பயணிக்கவுள்ளதாக சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

திருகோணமலையில் இன்றைய தினம் இடம்பெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

சிறீதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் ஒற்றுமையாகப் பயணிப்போம் இன்றைய தினம் எமது தமிழரசுக் கட்சி உட்கட்சி ஜனநாயகத்தை நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் முன்மாதிரியாக நிகழ்த்திக் காட்டி இருக்கின்றது. இதில் வெற்றி பெற்ற சக வேட்பாளர் மற்றும் எனது நண்பன் சிறீதரனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என தெரிவித்தார்.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விமலவீர திஸாநாயக்க எம்.பி மற்றும் பல உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

editor

ஊரடங்கு உத்தரவை மீறிய 77,877 பேர் கைது

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்