உள்நாடு

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை உடனடியாக வாபஸ் பெறுங்கள் – சஜித்

(UTV | கொழும்பு) –

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் 2 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்ற உத்தேசித்துள்ளனர்.இச் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் ஆராயப்பட்டபோது,இச் சட்டங்களில் 50% க்கும் மேலான பகுதிகள் சிறப்புப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் நிறைவேற்றப்படும் போது பொதுமக்களின் கருத்துச் சுதந்திரம்,பேச்சுரிமை,கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம்,அரசியல் செய்யும் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை மற்றும் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன என சிவில் சமூக அமைப்புகள்,ஊடக அமைப்புக்கள் மற்றும் பல்வேறு பங்குதாரர்களுடன் நடத்திய மிக முக்கியமான தீர்மானம் மிக்க கலந்துரையாடலில் வெளிக்கொணரப்பட்டது.

 

இவ்வாறானதொரு நிலையிலேயே,இந்த சட்டமூலத்தை இரண்டு நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாது சம்பந்தப்பட்ட பங்குதாரர்களையும், பொதுமக்களையும் தொடர்பு கொண்டு கலந்துரையாடி,முக்கிய திருத்தம் செய்து, மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் இச்சட்டமூலம் அமுல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் சபாநாயகரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்.

 

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அடுத்த வாரம் விவாதத்தில் இருந்து விலக்கிக் கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோரி அனுப்பியுள்ள விசேட கடிதம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். நிகழ்நிலை காப்பு சட்டமூலம் என்ற பெயரில், ஏகாதிபத்தியம்,சர்வாதிகாரம் கோலோச்சி, தனி நபர் 220 இலட்சம் பேரின் மனித உரிமைகளை மீறுவதான செயலாகும்.இதனை வன்மையாக நிராகரிப்பதோடு நிபந்தனையின்றிய எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அடுத்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளாது,உயர் நீதிமன்றத்தின் முடிவுகளை மேலும் புரிந்து ஆராய்ந்து,அந்த முன்மொழிவுகளை மதித்து, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் வேலைத்திட்டத்தில்,மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டமாக இதனை மீள முன்வைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் யோசனை தெரிவித்தார்.

 

நாட்டில் ஏகாதிபத்தியத்திற்கு இடமில்லை. முக்கியமான தேர்தல் வருடமொன்றில் கடுமையான ஜனநாயக விரோத,சர்வாதிகார ரீதியிலான அவசரத்தனமான சட்டமூலங்கள் மூலம் பொது மக்களின் விருப்பத்தை நசுக்கவும் அழிக்கவும் இடமளிக்க மாட்டோம். இது குறித்து சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டும்.நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி,இந்த சட்ட மூலம் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றிக் கொள்வதை ஒத்திவைக்குமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் கோரிக்கை விடுத்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புத்தாண்டை வரவேற்கும் முகமாக காலி முகத்திடலில் இடம்பெற்ற பல்வேறு கோலாகல நிகழ்வுகள் [VIDEO]

அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தங்க விருது!

தமிழ் பொதுவேட்பாளர் யோசனையை நிராகரித்த சம்பந்தன் – மாவை, சுமந்திரனிடம் வெளிப்படுத்தினார்