உள்நாடு

மேலும் 986 பேர் கைது!

(UTV | கொழும்பு) –

இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 986 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம், போதைப்பொருள் குற்றச்சாட்டில் 667 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 498 கிராம் ஹெரோயின் மற்றும் 143 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 10 பேர் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட உள்ளதுடன், போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
மேலும், பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 319 சந்தேக நபர்கள் மற்றும் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களும் நேற்றைய சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

முஸ்லிம், கிறிஸ்தவ மன்னர்களின் மத வெறி போல் சரத் வீரசேகர- சச்சிதானந்தம்

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி