உள்நாடு

யுவன் சங்கர் ராஜாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி!

(UTV | கொழும்பு) –

பிரபல திரைப்பட இசைக்கலைஞரும், பின்னணி பாடகரும், பாடல் ஆசிரியருமான யுவன் சங்கர் ராஜாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவிருந்த நிலையில் பெரும்பாலானோரின் கோரிக்கைகளுக்கு அமைய கொழும்பு CR & FC மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொள்ளுப்பிட்டியிலுள்ள கிராண்ட் பெல் ஹோட்டலில் நடைபெற்றது.
ஆரா எண்டர்டெய்மன்ட் நிறுவன முகாமைத்துவ இயக்குநர் ஆனண்ட் ராமநாதன், சதீஸ் ஜுவலரி தலைவர் ஆர்.சதாசிவம் மற்றும் புக் மை ஷோ பிரதம செயற்பாட்டாளர் சுஹைப் ஜவாஹிட் ஆகியோர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இவ்விசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான ஹரிச்சரன், என்ரியா, பிரேம்ஜி, திவாகர், சாம்விஷால், ருக்சார், சௌந்தர்யா, கௌதம், எம்.சி சனா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“இளவயது திருமணங்களால் சீரழியும் யுவதிகள்” – இளைஞர் பாராளுமன்றில் அப்னான் உரை

கடந்த 24 மணிநேரத்தில் 743 பேர் கைது

வரவு-செலவுத் திட்டம் 2021