உள்நாடு

இலங்கையில் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம்!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் நோமெட் (NOMAD) எனப்படும் புதிய வீசா திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய இதனை தெரிவி்த்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்து ஒன்லைன் மூலம் வெளிநாடுகளில் வேலை செய்வோருக்கு இந்த டிஜிட்டல் வீசா வழங்கப்பட உள்ளது. முதலீட்டாளர்கள் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரையில் இலங்கையில் தங்கியிருப்பதற்காக வீசா வழங்கப்பட உள்ளது. மேலும் இலங்கையில் வாழ்நாள் முழுவதும் தங்கியிருக்க விரும்புவோருக்கு நிரந்தர வீசா வழங்கப்பட உள்ளது.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பிரஜைகள் வீசா பெற்றுக்கொள்வதினை இலகுவாக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சுற்றுலா வீசா நடைமுறைகளை இலகுபடுத்துவதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்கள் வீசா பெற்றுக் கொள்வதனை இலகுபடுத்தும் நோக்கில் வவுனியாவில் பெப்ரவரி மாதம் காரியாலயமொன்று திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பாரபட்சமின்றி நடந்து கொள்வார் – சஜித் பிரேமதாச நம்பிக்கை

editor

முல்லைத்தீவில் பரவும் கொரோனா வைரஸ் ?

கொவிட-19 தடுப்பூசி : முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை