உள்நாடு

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பாவனையாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள பொது நிதி மேலாண்மை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், நாட்டின் பொருளாதார நெருக்கடியில் பயன்படுத்தப்பட்ட நிலையான மற்றும் கையடக்க தொலைபேசிகளின் எண்ணிக்கை முறையே 19.4 சதவீதம் மற்றும் 5.3 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கையடக்கத் தொலைபேசி இணைய இணைப்புகள் உட்பட இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கையும் 1.0 சதவீதம் குறைந்து 21.9 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இலங்கையில் 100 பேருக்கு 146.9 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பிற தொலைபேசிகள் இருந்தன.

எனினும், 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கையில் 6.8 சதவீதத்தால் வீழ்ச்சி ஏற்பட்டு 100 பேருக்கு 137 என்ற ரீதியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் ஏனைய உபகரணங்களுக்கு வற் விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்டாரிலிருந்து 264 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்

கொவிட் தொற்றாளர்களுக்கான டொஸி மாத்திரைகள் சனியன்று நாட்டுக்கு

இன்றும் நாட்டில் மின்வெட்டு