உள்நாடு

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்!

(UTV | கொழும்பு) –

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணையின் இரண்டாம் கட்ட அட்டவணையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024 பெப்ரவரி 05 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

2023 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணையின் இரண்டாம் கட்டத்தை 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு முதலில் தீர்மானித்திருந்தது. எவ்வாறாயினும், தற்போது நடைபெற்று வரும் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் விவசாய விஞ்ஞான வினாத்தாளை 2024 பெப்ரவரி 01 ஆம் திகதி மீள் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் எடுத்த தீர்மானத்தின் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

விவசாய விஞ்ஞான பாடத் தாள் 1 மற்றும் 2 ஆகிய இரு தாள்களும் பரீட்சைக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் கசிந்ததாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து பரீட்சைகள் திணைக்களம் இரத்துச் செய்தது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருட்களின் விலைகளை திருத்தம்!

பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறு – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்.

இஸ்ரேலிய பிரஜைகள் மீதான தாக்குதல் திட்டம் – இருவர் கைது

editor