உள்நாடுவணிகம்

இலங்கையில் தங்கத்திற்கு நிகராக மாறிய கரட்!

(UTV | கொழும்பு) –

இலங்கையில் முதன்முறையாக ஒரு கிலோ கரட்டின் சில்லறை விலை நேற்று 2200 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கத்தின் விலை நாளாந்தம் அதிகரித்து வருது போன்று சமகாலத்தில் மரக்கறிகளின் விலைகளும் பாரியளவில் அதித்துள்ளது.

நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று ஒரு கிலோ கரட் 2200 ரூபா சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை ஒரு கிலோ கரட் 1400 ரூபாய் சில்லறை விலையில் விற்பனை செய்யப்பட்டது. கரட்டிற்கு மேலதிகமாக பீன்ஸ் 1400 ரூபாவிற்கும் பீட்ரூட் 1200 ரூபாவிற்கும் நேற்று விற்பனை செய்யப்பட்டது.

நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை 1800 ரூபாவாக அதிகரித்திருந்தது. நுவரெலியா தோட்டங்களில் இருந்து விவசாயிகள் ஒரு கிலோ கரட்டை1700 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்தனர். சாதாரணமாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்திற்கு நாளாந்தம் 40,000 முதல் 45,000 கிலோகிராம் வரையான கரட் கிடைக்கும், ஆனால் இந்த நாட்களில் பெறப்படும் கரட்டின் மொத்த அளவு 5,000 கிலோகிராமிற்கும் குறைவாகவே குறைந்துள்ளது.

இதன்காரணமாக கரட்டின் விலை அதிகரித்துள்ள நிலையில், எதிர்வரும் நாட்களில் ஒரு கிலோ கேரட்டின் விலை மேலும் உயரும் என பொருளாதார மைய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். கரட்டின் விலை அதிகரிப்பு காரணமாக நுவரெலியா விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் உள்ள சில்லறை விற்பனை நிலையங்களில் கரட் விற்பனை செய்யப்படுவதில்லை.

தற்போது மழையுடனான காலநிலை குறைந்து வரும் நிலையில் கரட் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவை எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் அறுவடை செய்யப்படும், எனவே அதுவரை கரட்டின் விலை உயரும் என்று பொருளாதார மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எனது மகன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக இல்லை- மஹிந்த

அதி சொகுசு பேரூந்துகளின் கட்டண நிர்ணயம் குறித்து ஆலோசனை

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் தடை நீடிப்பு!