உள்நாடு

குரங்குகளுக்கு கருத்தடை!

(UTV | கொழும்பு) –

”மாத்தளை மாவட்டத்தில் ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக” நாடாளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார தெரிவித்துள்ளார். மாத்தளை மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” மாத்தளை மாவட்டத்தில் உள்ள குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதன் காரணமாக அப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர். குரங்குகளின் அதிகரிப்பால் பயிர்ச் செய்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே இதனைக் கருத்தில் கொண்டு இலங்கையில் முதன் முறையாக ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் திட்டத்தை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மன்னாரிற்கு விஜயம் செய்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் அநுர ஜெயசேகர

editor

ஹிட்லரின் இனவெறிப் பேச்சுக்களையும் மிஞ்சி : முஸ்லிம்களுக்கு எதிராக பேசும் மோடி

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்