(UTV | கொழும்பு) –
நாடளாவிய ரீதியில் யுக்திய நடவடிக்கையின் கீழ் நேற்று முதல் இன்று அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 13 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்பு காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் போதைக்கு அடிமையான 8 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் பதிவு செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பட்டியலில் இருந்த 45 சந்தேக நபர்களை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் அளவு போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
227 கிராம் ஹெராயின்
168 கிராம் ஐஸ்
கஞ்சா 8 கிலோ 40 கிராம்
13,892 கஞ்சா செடிகள்
227 கிராம் மாவா
24 கிராம் மதன மோதகம்
647 மாத்திரைகள்
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්