உலகம்

பனிப்பாறைகளில் உருவாகும் உருவங்கள்!

(UTV | கொழும்பு) –

அந்தாட்டிக்கா கண்டத்தில் தினம் தினம் சிறிதாக உருகும் பனிப்பாறையில் மிகப் பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன. பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. பூமியின் தென் துருவத்தில் உள்ள அந்தாட்டிக்கா (Antarctica), முழுவதும் பனிப்பாறைகள் நிறைந்து காணப்படும் கண்டமாகும். இங்கு மனிதர்கள் வசிப்பதில் கடினமாக இருப்பினும் ஆராய்ச்சியாளர்களும், சுற்றுலா பயணிகளும் சென்று வருகினறனர்.

இங்குள்ள பனிப்பாறைகளில் மிக பெரியதாக ஏ23ஏ (A23a) உள்ளது. 1986களிலேயே ஏ23ஏ அப்பிரதேசத்தின் கடல் பகுதியிலிருந்து உடைந்து நகர்ந்து செல்ல தொடங்கியது. சுமார் 30 வருடங்களாக வெட்டல் கடல் (Weddell Sea) பகுதியின் ஆழத்தில் சிக்கி அங்கேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏ23ஏ பனிப்பாறை, சுமார் 4 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. அங்கு உள்ள பனி நீர் சுழற்சியால் தென் ஆர்க்னி தீவை (South Orkney Islands) நோக்கி இது மெதுவாக பயணிக்க தொடங்கியுள்ளது.

பனிப்பாறையின் நகர்வை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்த நிபுணர் குழு ஒன்று அப்புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
தினம் தினம் சிறிதாக உருகும் ஏ23ஏ பனிப்பாறையில் மிக பெரிய வளைவுகளும், குகைகளும் இயற்கையாக உருவாகியுள்ளன.
எப்பொழுது என உறுதியிட்டு கூற முடியாவிட்டாலும் சில ஆண்டுகளில் ஏ23ஏ முழுவதும் உருகி விடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரஷ்ய அரசு நவல்னிக்கு எதிராக புதிதாக விசாரணைகள் ஆரம்பம்

மகனுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்

editor

இரு நாட்டின் உறவு முக்கியமானது – சீனா