(UTV | கொழும்பு) –
சிறைச்சாலைகளில் உள்ள சிறைக் கூடங்களின் எண்ணிக்கையை விடவும் அதில் சிறைவைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 232 சதவீதமாக உயர்ந்துள்ளது. சிறைகளில் கூட்ட நெரிசலை நிர்வகிப்பதற்கான செயல்திறன் கணக்காய்வு அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளை பராமரிக்க ஆண்டுதோறும் 800 கோடி ரூபாவுக்கு மேல் அரசு செலவிடுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மொத்த கைதிகளில் 53 சதவீதம் பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. குறித்த கணக்காய்வு அறிக்கையின்படி, 27 சிறைகளில் 187 கழிப்பறைகள் பற்றாக்குறையாக உள்ளதாகவும், தற்போதுள்ள 287 கழிவறைகள் பழுதுபார்க்க வேண்டிய நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதிகளுக்கு பிணை வழங்கப்பட்டுள்ள போதிலும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் 1795 கைதிகள் சிறையில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இரண்டு சிறைச்சாலைகளில் அண்மைய வன்முறைகள் காரணமாக பல கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්