உள்நாடு

வெட் வரி அறவீடு தொடர்பில் புதிய அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

வெட் வரி அறவீட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்த முறைப்பாடுகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. உரிய முறையின்றி சிலர் வரி வசூலிப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சேபாலிகா சந்திரசேகர தெரிவித்தார்.

எனவே இது தொடர்பாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கமைய, இந்த விடயம் தொடர்பிலான முறைப்பாடுகளை எழுத்து மூலம் சாட்சியங்களுடன் cgir@ird.gov.lk எனும் இணையத்தள முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்லது ஆணையாளர் நாயகம், உள்நாட்டு இறைவரி திணைக்களம், சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தை, கொழும்பு 2 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் அனுப்பி வைக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யாழில் பெண் வேடத்தில் வந்து தாக்குதல் – 9 பேர் கைது.

பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட கழிவுகளை மீள அனுப்ப நடவடிக்கை

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகளுக்கான அறிவிப்பு