உள்நாடு

மக்கள் பட்டினியால் பலியாவதா? ஐ.நா எச்சரிக்கை

(UTV | கொழும்பு) –

காஸாவுக்கு அதிகமான வாழ்வாதார உதவிகள் தேவை, இல்லையெனில் ஏற்கெனவே பஞ்சம் மற்றும் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் பலஸ்தீனர்கள் இன்னும் அதிகம் பாதிப்புக்குள்ளாவார்கள் என ஐ.நாவின் அமைப்புகள் எச்சரித்துள்ளன. ஐநாவின் மூன்று அமைப்புகள் நேரடியாக இஸ்ரேலைக் குற்றம் சாட்டவில்லையெனினும் வாழ்வாதார பொருள்களை அனுமதிக்கும் எல்லை பகுதிகள் குறைவாக இருப்பதும் சோதனையிட அதிக நேரம் எடுத்து கொள்வதும் இந்த விவகாரத்தை மேலும் சிக்கலாக்குவதாக அவர்கள் குறிப்பிட்டு்ள்ளனர்.

ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேல் 101-வது நாளாக தனது போர் நடவடிக்கையைத் தொடர்ந்து வருகிறது. 23 இலட்சம் கொண்ட காஸா மக்கள் தொகையில் 85 சதவிகிதம் பேர் வீட்டை விட்டு இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் வசித்து வருகிறார்கள். 5 இலட்சத்துக்கும் அதிகமான பேர் பட்டினியால் பாதிக்கப்படுவதாக ஐ.நா தெரிவித்தது. சில மைல் தூரத்தில் உணவு பொருள்கள் இருந்தும் மக்களை, பட்டினி சாவுக்கு இழக்கும் நிலை நீடிப்பதாகவும் ஒவ்வொரு மணிநேரமும் கணக்கில்லாத உயிர்களை இடரில் வைத்திருப்பதாகவும் உலக உணவு திட்டத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

உலக உணவு திட்டம், யுனிசெப் மற்றும் உலக சுகாதார நிறுவனம் காஸாவுக்கு வாழ்வாதார பொருள்கள் விரைவில் கிடைக்க வலியுறுத்தியுள்ளன .பட்டினியில் உள்ள மக்கள் உணவு பொருள்களை ஏற்றிச் செல்லும் டிரக்குகளை வழிமறித்து அதனை எடுக்கும் விடியோ வெளியானது. உதவிகள் சீராக சென்று சேர்வதில்லை என்பதை அந்த விடியோ காட்டுகிறது. வடக்கு காஸாவுக்கு 40 கிமீ தொலைவில் உள்ள இஸ்ரேலின் துறைமுகமான அஷ்தோட் துறைமுகத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு ஐ.நா அமைப்புகள் இஸ்ரேலிடம் கோரியுள்ளன. இஸ்ரேல் வாழ்வாதார பொருள்களின் விநியோகம் பாதிக்கப்படுவதற்கு ஐநா தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளது. ஐநாவிடம் போதுமான பணியாளர்களோ நெறிமுறையோ இல்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராணுவ சிப்பாயின் துப்பாக்கி மீட்பு

நாடாளுமன்றத்தில் புதிய நிதிக் குழு

அத்தியாவசிய பொருட்களின் விலை : வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து