உள்நாடு

நல்லடக்கத்தில் கலந்துகொண்ட பூனை!

(UTV | கொழும்பு) –   நாசிவன்தீவு பகுதியில் வெள்ளிக்கிழமை (12) நீரில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்த 17 வயதுடைய வாழைச்சேனை மாஹிர் ஆதிக் எனும் இளைஞனின் உடல் நேற்று (13) சனிக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட நல்லடக்கத்தின்போது, மரணமடைந்த ஆதிக் வளர்த்த பூனையும் கலந்து கொண்டது.

மரணமடைந்த ஆதிக் சுமார் இரண்டு வருடங்களாக அந்த பூனையை மிகவும் பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார்.

ஆதிக் அதற்கு உணவு ஊட்டுவது, அதன் அருகில் தூங்குவது என அந்த பூனை ஆதிக்குடன் ஒட்டி உறவாடியுள்ளது.

நேற்று முதல் ஆதிக்கை தேடி அழுதவாறு திரிந்த பூனை இன்று அவரது உடல் வீட்டிலிருந்து பள்ளிவாசலுக்கு கொண்டு செல்லும்போது அழுது துடியாய் துடித்துள்ளது.

அதனை அவதானித்த அதீகின் உறவினர்கள் பூனையை ஆறுதல்படுத்த நல்லடக்கம் செய்யும் இடத்துக்கு கொண்டடு வந்தனர்.

பூனையின் இந்த செயற்பாடு பலரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

புதிய அரசியல் கலாசார மாற்றத்துக்கு முழுமையான ஆதரவு – ஹர்ஷ டி சில்வா

editor

எதிர்வரும் 27 ஆம் திகதி வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட மாட்டாது

சாதாரண தரப் பரீட்சை இன்றுடன் நிறைவு