உள்நாடு

நாட்டில் மருத்துவ துறையில் பாரிய நெருக்கடி!

(UTV | கொழும்பு) –

பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு 1,700 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் மற்றும் 900 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த நடவடிக்கையானது இலங்கையின் மருத்துவத் துறையினையும் பல்கலைக்கழங்களின் கல்வி நடவடிக்கையினையும் பெரும் நெருக்கடிக்குத் தள்ளியுள்ளது.

இலங்கையின் உயர் கல்வித் துறையைப் பொறுத்தமட்டில், 2023 இல் சுமார் 900 பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.இதனால், தற்போது விரிவுரையாளர்கள் மத்தியில் 50 சதவீத வெற்றிடம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுமார் 155,000 பல்கலைக்கழக மாணவர் தொகையினை கருத்தில் கொண்டு, இலங்கைப் பல்கலைக்கழகங்களுக்கு உகந்த முறையில் இயங்குவதற்கு சுமார் 13,000 விரிவுரையாளர்கள் தேவைப்படுகின்றனர். எனினும், தற்போது 6,500 விரிவுரையாளர்கள் மாத்திரமே பல்கலைக்கழகங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளமையினால், உயர் கல்வித் துறையானது பெரும் நெருக்கடியினை சந்தித்துள்ளது.

1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் ஆழமான மந்த நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில் பல காரணிகள் இந்த வெளியேற்றத்திற்கு பங்களிப்பு செய்கின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜனாதிபதி – குவைத் பிரதமர் இடையே சந்திப்பு

முகாம்களில் இருந்த 503 பேர் இன்று வீடு திரும்பினர்

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]