(UTV | கொழும்பு) –
2019ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா தொற்று காரணமாக வடகொரியா தனது நாட்டின் எல்லைகளை கடந்த 2020ஆம் ஆண்டு மூடியது. இதனால் சுற்றுலா துறை மூலம் கிடைக்கும் வருவாய் வெகுவாக பாதிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு நிலை திரும்புவதால் வடகொரியாவும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி தனது நட்பு நாடான ரஷ்யாவுக்கு முதன்முதலில் அனுமதி வழங்கப்படுவதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தனது அண்டை நாடான சீனாவுக்கு முதலில் அனுமதி அளிக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் ரஷ்யாவுக்கு அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්