உள்நாடு

பொலிஸ் காவலரண் மீது குண்டு வீச்சு!

(UTV | கொழும்பு) –

யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் காவலரண் மீது இரு நபர்களால் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவம் நேற்று  பதிவாகியுள்ளது.

தாக்குதல் மேற்கொண்டு இருவரும் தப்பிச் செல்ல முயன்ற போது பொலிஸார்  துரத்தி சென்று அவர்களை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரியவந்துள்ளது.

மண்டைதீவு மற்றும் ஊர்காவற்துறையை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணத்தையும் , தீவகத்தையும் இணைக்கும், மண்டைதீவு சந்தியில் பொலிஸ் காவலரண் காணப்படுவதனால் தீவக பகுதிகளில் இருந்து சட்டவிரோத இறைச்சிகள், போதைப் பொருட்கள் என்பவற்றை யாழ்ப்பாணத்திற்கு கடத்தப்படுவது பெருமளவில் கட்டுப்படுத்தப்படிருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

“சவால்களை எதிர்கொள்ளக்கூடியவர்கள் மொட்டுக் கட்சியிலே உள்ளனர்”

‘இலங்கை கால்பந்து சம்மேளனம்’ கோபா குழு முன்னிலையில் அழைப்பு

‘தேத்தண்ணி’ நூல் அறிமுக நிகழ்வு