உள்நாடு

பிரித்தானிய இளவரசி நாட்டை வந்தடைந்தார்!

(UTV | கொழும்பு) –

இளவரசி ஆன் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL 504 இல் நாட்டை வந்தடைந்ததாக “அத தெரண” விமான நிலைய செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் கொண்டாடும் வகையில் இளவரசி ஆனின் இந்த விஜயம் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு பிரித்தானிய அரச குடும்பத்தின் முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவாகும்.

இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருக்கும் இளவரசி ஆன், கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகைக்கு செல்ல உள்ளார்.

மறைந்த எலிசபெத் மஹாராணியாரின் இரண்டாவது மகளும் ஒரேயொரு பெண் வாரிசும் பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸின் ஒரே ஒரு சகோதரியும் இவர் என்பது குறிப்பித்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தற்காப்புக்காக வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை கையளிக்குமாறு அறிவிப்பு

editor

ஜாகிலிய்யத்தை கக்கும் நியாஸ் – முன்னாள் புத்தள பிரதி நகர பிதா அலிகான் குற்றச்சாட்டு

நிர்க்கதியான இலங்கையர்கள் 14 பேர் நாட்டிற்கு வருகை