உலகம்

கியூபாவில் எரிபொருள் விலை உயர்வு!

(UTV | கொழும்பு) –

எரிபொருள் விலையை 500 சதவீதம் உயர்த்த கியூபா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையை அதிகரிக்கவுள்ளதாக கியூபா அரசாங்கம் அறிவித்துள்ளது.

வரவு செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்கும் ஒரு நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், எரிபொருள் விலைக்கு மேலதிகமாக மின் கட்டணத்தையும் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டியுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

11 மில்லியன் மக்கள் வசிக்கும் கியூபா, 1990க்குப் பிறகு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை தற்போது சந்தித்து வருகிறது.
நாட்டில் பணவீக்கமும் வேகமாக அதிகரித்துள்ளதோடு, எரிபொருள் விலையை 500 வீதத்தால் அதிகரிப்பதன் மூலம் நிலைமை மேலும் மோசமாகும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சீனாவில் அவசரகாலநிலை பிரகடனம்

உலகளவில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 80 இலட்சத்தை கடந்தது

சீனாவின் முன்னாள் தலைவர் ஜியாங் ஜெமின் காலமானார்.