(UTV | கொழும்பு) –
ஈக்குவடோரில் தொலைகாட்சி நிலையத்திற்குள் நேரடி ஒளிபரப்பின் போது உள்ளே நுழைந்த ஆயுததாரிகள் பணியாளர்களை அச்சுறுத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஈக்குவடோரின் குவாயாகில் நகரில் டீசி தொலைக்காட்சியின் அலுவலகத்திற்குள் நேரடி ஒளிபரப்பின் போது நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் பணியாளர்களை அச்சுறுத்தி நிலத்தில் அமரச்செய்துள்ளனர் . பின்னர் நேரடி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் பலரை பணயக்கைதிகளாக பிடித்தவாறு அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். சிலரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மிகவும் ஆபத்தான குற்றவாளியொருவன் சிறையிலிருந்து தப்பியோடியுள்ளதை தொடர்ந்து ஈக்குவடோரில் 60 நாள் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் ஆபத்தான குற்றவாளிதப்பியோடிய சம்பவத்திற்கும் தொலைக்காட்சி நிலையத்தில் இடம்பெற்ற சம்பவத்திற்கும் தொடர்புள்ளதா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
தொலைக்காட்சி நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் பணியாளர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து அச்சுறுத்துவதை காண்பிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. என்னை சுடாதீர்கள் என பெண் ஒருவர் கதறுவதையும் நபர் ஒரு வலியால் அலறுவதையும் கேட்க முடிந்ததாக ஏஎவ்பி தெரிவித்துள்ளது.
அவர்கள் எங்களை கொலை செய்ய வந்துள்ளனர் கடவுளே இது இடம்பெறுவதற்கு அனுமதிக்காதீர்கள் குற்றவாளி நேரலையில் உள்ளான் என ஊழியர் ஒருவர் வட்ஸ் அப் மூலம் செய்தி அனுப்பியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්