(UTV | கொழும்பு) –
நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் இன்று காலை 8 மணி முதல் அரச வைத்தியசாலைகளில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
35 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப்போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
வைத்தியர்களுக்கான Disturbance, Availability and Transport (DAT) கொடுப்பனவை இரட்டிப்பாக்க ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு நேற்று அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அதன் படி குறித்த கொடுப்பனவானது 35,000 ரூபாவிலிருந்து 70,000 ரூபாவாக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්