உள்நாடு

தயாசிறிக்கு எதிராக தடையுத்தரவு!

(UTV | கொழும்பு) –

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின்  பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படுவதையும், இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தவறான பரிந்துரைகளை வழங்குவதையும் தடுக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு எதிர்வரும் 21ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என கொழும்பு மாவட்ட நீதிபதி  சந்துன் விதானகே உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் செயலாளர் நாயகம் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

 அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று பணிப்புறக்கணிப்பு

விவசாய இராஜாங்க அமைச்சராக ஷாந்த பண்டார