உள்நாடு

யாழில் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

(UTV | கொழும்பு) –

தேசிய கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட  பிரதிநிதிகளுக்கும் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று  கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்திற்கு நான்கு நாள் விஜயமாக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் அழைப்பில கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

குறித்த கலந்துரையாடலில் கட்சியின் ஆதரவாளர்கள் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.ஜனாதிபதிக்கு நினைவு பரிசில்களையும் கோரிக்கை கடிதங்களையும் வழங்கி வைத்தனர்.

குறித்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, தற்பொழுது நம் அனைவருக்கும் உள்ள மிகப்பெரிய சவால்  பொருளாதார மேம்பாட்டினை ஏற்படுத்துவதாகும். அத்தோடு  வடபகுதியில் உள்ள வளங்களை பயன்படுத்தி பொருளாதாரத்தினை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது தொடர்பில்  ஆராய்ந்து வருகின்றோம்.

குறிப்பாக நான் வடக்கிற்கு வருகை தரும் போதெல்லாம்  பிரச்சினை என்னவென கேட்கும் போது காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனை அரசியல் தீர்வு என ஒரு சில பிரச்சினைகளுடன்  மாத்திரம் என்னிடம் அணுகுவார்கள். அதனை விடுத்து நாம் முன்னோக்கி செல்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி தான் நான் ஆராய்கின்றேன்.

குறிப்பாக விவசாயத் துறையினை நவீன மயப்படுத்தி நவீன முறையிலான விவசாய முறைகளை விரிவுபடுத்துவதன் மூலம் தன்னிறைவு பொருளாதாரம் ஒன்றினை உருவாக்குவதே எமது நோக்கம். அத்தோடு வெளிநாடுகளில் எவ்வாறு மின்சாரத்தினை இயற்கை வளத்தினை பயன்படுத்தி உற்பத்தி செய்கின்றார்கள். அல்லது விவசாய உற்பத்தினை எவ்வாறு நவீன முறையில் உற்பத்தி செய்கின்றார்கள் போன்றவற்றை நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். எனவே எதிர் வரும் காலங்களில் நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு பொருளாதாரத்தை மேம்படுத்தல் அவசியமான ஒன்றாகும். அதற்கு அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

         

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

சில பகுதிகளுக்கான முடக்கம் தளர்வு

தனியார் துறை ஊழியர்களது சம்பளம் தொடர்பில் அறிவிப்பு

பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு