உள்நாடு

பொலிஸ் திணைக்களத்தில் இணைந்த பிரபல கிரிக்கெட் வீரர்கள்!

(UTV | கொழும்பு) –

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நால்வர் உத்தியோகபூர்வமாக இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் இணைந்துள்ளனர்.

குசல் ஜனித் பெரேரா மற்றும் சாமர சில்வா ஆகியோர் தலைமை பொலிஸ் ஆய்வாளர்களாகவும் அஷென் பண்டார மற்றும் நுவான் பிரதீப் ஆகியோர் பொலிஸ் ஆய்வாளர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நான்கு கிரிக்கெட் வீரர்களும் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் கடந்த வருடம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.

இந்நிலையிலேயே, இவர்களை கௌரவிக்கும் முகமாக இலங்கை பொலிஸ் திணைக்களம் குறித்த பதவி வழங்கல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சமீபத்தில் இடம்பெற்ற முதல் தர கிரிக்கெட் சுற்றுப்போட்டி ஒன்றில் இலங்கை பொலிஸ் அணி இணை சாம்பியனாக வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பேருந்து கட்டண உயர்வு குறித்து இன்று தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிர் நீத்த அனைவரையும் கவலையுடன் நினைவு கூறுகிறேன்

ஹிருணிகாவின் மனு விசாரணை ஜூலை 15 இல்.