(UTV | கொழும்பு) –
நாட்டில் இன்று முதல் 4 மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். தட்டம்மை தடுப்பூசியை மேலதிகமாக வழங்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வேலைத்திட்டம் 2 கட்டங்களாக அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் ஒரு வார கால டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நிஜித் சுமனசேன வலியுறுத்தியுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්