உள்நாடு

சிகிச்சைக்காக 2 கோடி ரூபாவை செலவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்!

(UTV | கொழும்பு) –

அரகலய போராட்டத்தின் போது தான் தாக்கப்பட்டமையினால் ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க சுமார் இரண்டு கோடி ரூபா பணத்தினை செலவு செய்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளராக இருப்பதற்கான அனைத்து தகுதிகளும் தன்னிடம் இருப்பதாகவும், ஆனால் அதற்கான பணம் தற்போது தன்னிடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

போராட்டத்தின் போது தான் தாக்கப்பட்டமையினால் ஏற்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க சுமார் இரண்டு கோடி ரூபா பணத்தினை செலவு செய்துள்ளேன். எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்குச் செலவழிக்க தன்னிடம் பணம் இல்லை, இன்று நாட்டின் பொருளாதாரமும், தனது சொந்த பொருளாதாரமும் பாதிப்பில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள எம்.பி.க்களுக்கு பணம் பற்றிய எந்த கவலையும் இல்லை என்றும், கடந்த காலங்களில் மரண வீடுகளுக்கு சென்ற போது பிணம் மட்டும் தான் எழும்பவில்லை என்றும், இன்று மக்கள் கூட எழும்புவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று- வெல்லப்போவது யார்?

தற்போதைய நெருக்கடி நிலைமை : நீடிக்கும் கலந்துரையாடல்கள்

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 10 பேர் இன்று பதவிப்பிரமாணம்