உள்நாடுசூடான செய்திகள் 1

VAT வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்தின் விலை அதிகரிப்பு..!

(UTV | கொழும்பு) –  VAT வரி அதிகரிப்பையடுத்து, சீமெந்து ஒரு மூடையின் விலை ரூ.150 முதல் ரூ.350 வரை உயர்த்தப்பட்டுள்ளதாக சீமெந்து உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விலை உயர்வின் மூலம் சில சீமெந்து நிறுவனங்களில் 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடையின் விலை 2,300 ரூபாவாகவும், மற்றொரு நிறுவனத்தில் சீமெந்து மூடையின் விலை 2,450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வரி உயர்வுக்கு முன், சில நிறுவனங்களில் சீமெந்து மூடையின் விலை, 1,980 ரூபாயாகவும், சில நிறுவனங்களில், சீமெந்து மூடையின் விலை, 2,300 ரூபாயாகவும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நடைமுறைப் பரீட்சைகள் 29 ஆம் திகதி முதல் ஆரம்பம்

O/L பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக வெளியான புதிய தகவல்!

சம்பிக்க விவகாரம் – பூஜித் ஜயசுந்தரவிடம் வாக்குமூலம் பெற அனுமதி