உள்நாடுசூடான செய்திகள் 1

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகளால் பாடசாலைக்கு சோலார் மின் சக்தி திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது..!

(UTV | கொழும்பு) –    (அஷ்ரப் ஏ சமத்)

பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இன்று ( 04) புதிய கட்டிடத்தொகுதியில் சூரிய மின் சக்தி கருத்திட்டம் கல்லுாாி அதிபர் பழைய மாணவிகளால் அங்குரார்ப்பணம் செய்து வைக்க்பபட்டது. இத் திட்டம் பழைய மாணவிகள் சங்கத்தின் ஒரு முன்எடுப்பாகும்.

பாடசாலை இன்று அதன் வரலாற்றில் மற்றொரு மைல்கல்லை அடைந்திருப்பது உண்மையில் மிகவும் பெருமைக்குரிய விடயமாக இருக்கிறது. பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தில் சூரிய மின் சக்தி திட்டம் கல்லுாாி அதிபர் திருமதி நஸ்ரியா முனாஸிடம் கையளிக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது..

இங்கு உரையாற்றிய கல்லுாாி அதிபர் நஸ்ரியா ……

. பம்பலப்பிட்டி முஸ்லிம் மகளிர் கல்லூரியானது எப்போதும் அதனது மாணவர் சமூகத்தின் மத்தியில் புதிய சிந்தனையை வளர்த்து , புத்தாக்கமுடைய மற்றும் சவால்மிக்க கருத்துக்களுடன் முன்னணி வகித்துச் செல்கிறது

பசுமை சக்தியுடன் புதிய யுகத்திற்கான பயணத்திற்கு காலடி எடுத்து வைத்துள்ள இப் பாடசாலையின் பழைய மாணவிகள் சங்கமானது கனவுகளை நனவாக்குவதில் மிகப்பெரும் சக்தியொன்றாக இருந்து வருகின்றது.

. இயற்கை மூலவளங்கள் மற்றும் சுற்றாடல் நிலைபேறான தன்மைக்கான விழுமியங்களை கட்டியெழுப்பும் தூர நோக்குடன் பாடசலையின் பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த திட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்காக திட்டமிடப்பட்ட கருத்திட்டங்கள் சூரிய மின் சக்தி கருத்திட்டம் ஒன்றாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இச் சங்கத்தின் சுருசுருப்பாக கரு திட்டத்திற்கான நிதியுதவியை பெற்று நன்கொடையாளர் மாலைதீவு நாட்டின் தொழிலதிபர் அஹமட் ஷியாம் மொஹமட் அவர்கள் ஊடாக சூரிய மின்சக்தி கருத்திட்டத்தின் மூலம் பாடசாலையின் மின்சாரத் தேவைகளுக்கு நிலையான தீர்வொன்றை கொண்டுவருவதில் வெற்றி பெற்றுள்ளார். கருத்திட்ட அமுலாக்கத்தை திருமதி சஹ்ரின் ரஹ்மான ஹமீ்ன் தலைமை தாங்கி முன்னெடுத்தது அது நிறைவேற்று குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆதரவளிக்கப்பட்ட துடன் . பௌதிகவியல் பாடத்துறை ஆசிரியர் திரு. எம்.எம். பஸீல் அவர்களினால் தொழில்நுட்ப வழிகாட்டலும் வழங்கப்பட்டது.

பழைய மாணவிகள் சங்கத்தின் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை முழு பாடசாலை சமூகமும் பாராட்டுவதுடன் இது சூழல் நட்பு மிக்க நிலைபேறான அபிவிருத்தி கருதுகோள்களை உருவாக்குவதை நோக்கி முன்னெடுப்பாகும்.

முஸ்லிம் மகளிர் கல்லுாாியின் பழைய மாணவிகளது சங்கத்தின் அடுத்த நிகழ்ச்சித் திட்டத்தில் இப் பாடசாலைக்கு புதிய கட்டிடத் தொகுதியொன்றை நிர்மாணிக்கின்ற திட்டமாகும்.

இது பாடசாலைக்கு மிக அவசரமானதும் மற்றும் முக்கியமானதுமான தேவையாக உள்ளது.
பாடசாலை வளாகத்தில் போதிய இடவசதி இனிமையானது பிள்ளைகளுக்கு இயற்கையான காற்று கிடைப்பதை தடுப்பதோடு அதிக வகுப்பறைகளுக்கு தேவை, கட்டிடங்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக பழையானவையாக இருப்பதால் தொடரான கட்டமைப்பு ரீதியான திருத்த வேலைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. புதிய கட்டிடத் தொகுதி கருத்திட்டம் எமது தேவைகள் அனைத்துக்குமான ஒரு தீர்வாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது
.
பல சிறிய கைகள் ஒன்றிணையும் போது மிகப் பெரிய விடயங்களைக் கூட நிறைவேற்ற முடியும் என நம்பப்படுகின்றது. சமுதாயத்தில் ஒர் அங்கமாகிய நாம் ஒவ்வொருவருக்கும் இந்த முயற்சிகளுக்கு அருளாக வழங்கப்பட்டுள்ள செல்வம் மற்றும் ஏனைய வழிவகைகள் மூலம் பெண் கல்வியின் நலன் விரும்பிகளாக உங்கள் பாடசாலை என்ற முழுமையான பிரசன்னத்துடன் பாடசாலையின் பழைய மாணவர்களாக பெற்றோர்கள் மற்றும் தற்போதைய மாணவிகள் சிந்தித்து ஆதரவு நல்குதல் நமது கடமையாகும்
நிலைபேறான உலகத்தை நோக்கிய எதிர் காலத்திற்குரிய தீர்வொன்றாக இக்கருத்திட்டம் இருப்பது ஒரு சிறந்த முன்மாதிரியாகும் என அங்கு கல்லுாாி அதிபர் உரையாற்றினார்.
இந் நிகழ்வில் பழைய மாணவிகள் சங்கத்தின் உப தலைவி பெரோஸா முசம்மில் மற்றும் பழைய மாணவிகள் சங்கத்தின் செயற்குழு உறுப்பிணர்கள் பிரதி அதிபர்கள் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி உறுப்பிணர்கள் மாணவத் தலைவிகளும் கலந்து சிறப்பித்தனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அனர்த்த நிலைமை குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இல.

ஜெனீவாவில் இம்முறை இந்தியாவும் ஆதரவு

இன்றும் நாளையும் பேலியகொட மெனிங் சந்தை திறப்பு