உள்நாடுசூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் வருகையை அடுத்து 5 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!

(UTV | கொழும்பு) – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (05.01) வெள்ளிக் கிழமை வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்ய 5 பேருக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றைய தினம் (04.01) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் வவுனியா நீதிமன்றில் தோன்றி முன்வைத்த முறைப்பாட்டின் அடையில் இத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதி 5 ஆம் திகதி அரச கடமைகளில் ஒன்றான மாவட்ட அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடுவதற்கு வருகை தரவுள்ளார். அதில் அரச அதிகாரிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது குறித்த பகுதியில் அமைதியின்மையை ஏற்படுத்தவும், வீதியை மறித்து அல்லது அப்பகுதியை மறித்து குழம்பும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த 5 பேருக்கு எதிராகவும், அவர்களது அமைப்புக்களுக்கு எதிராகவும் பொலிசார் தடை உத்தரவு கோரியிருந்தனர். அதனை கவனத்தில் எடுத்த மன்றும் 03.01.2024 இரவு 12 மணி முதல் 05.01.2024 இரவு 12 மணிவரை

அதனடிப்படையில் குறித்த தடை உத்தரவானது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கங்களைச் சேர்ந்த கோ.ராஜ்குமார், கா.ஜெயவனிதா, ஜெனிற்றா, சரோஜினிதேவி மற்றும் முன்னாள் முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட தலைவருமான அரவிந்தன் ஆகியோருக்கே பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடை உத்தரவு பொலிசாரால் சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் பொருட்களை சேகரித்தோர் கைது

குற்றங்களுடன் சமத்தப்படாத முஸ்லிம்களை விடுதலை செய்ய நடவடிக்கை