விளையாட்டு

I P L போட்டியில் இருந்து நேற்றைய தினம் வெளியேறிய அணி

(UDHAYAM, COLOMBO) – இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்று ஆரம்பமான, புள்ளி பட்டியலில் 3ஆம் மற்றும் 4ஆம் இடங்களில் உள்ள அணிகளுக்கிடையில் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி டக்வத் லூயிஸ் முறையில் 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியுடன் இடம்பெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 128 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி துடுப்பாட ஆரம்பித்த வேளை மழை குறுக்கிட்டது.

இதனையடுத்து போட்டி தாமதமாக மீண்டும் இன்று அதிகாலை ஆரம்பமானது.

இந்தநிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு, டக்வத் லூயின்ஸ் முறையில் 6 ஓவர்களில் 48 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்தநிலையில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 5.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இதற்கமைய அந்த அணி, இறுதி போட்டிக்கு செல்வதற்காக மும்பை இந்தியன் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதேவேளை, நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/05/161566-1.jpg”]

 

 

Related posts

ஆஸி அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு பந்துவீச விதிக்கப்பட்ட த​டை நீக்கம்

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவு முதலாவது டெஸ்ட் இன்று ஆரம்பம்