விளையாட்டு

சாதனை படைத்த மிட்செல் ஸ்டார்கின்!

(UTV | கொழும்பு) –

அவுஸ்திரேலியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் சர்வதேச கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்திச் சாதனை படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட் (2 மற்றும் 3) வீழ்த்திய ஸ்டார்க், 2ஆவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 2ஆவது இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் 263 போட்டியில் 651 விக்கெட்டுகள் சாய்த்து சாதனைப் படைத்தார்.

651 விக்கெட்டுகள் மூலம் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 4ஆவது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வார்னே 1001 விக்கெட்டுகள் வீழ்த்தி முதல் இடத்திலுள்ளார். சர்வதேச போட்டியில் அவரது சிறந்த பந்து வீச்சு, 28 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட் பெற்றதாகும். 23 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள இவர், இரண்டு முறை 10 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 84 டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 50 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாககும். டெஸ்ட் போட்டியில் 14 முறை ஐந்து விக்கெட், இரண்டு முறை 10 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

 

121 ஒருநாள் போட்டிகளில் 236 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். 28 ஓட்டங்களுக்கு 6 விக்கெட் வீழ்த்தியது சிறந்த பந்து வீச்சாகும். 9 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 58 போட்டிகளில் 73 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

U-19 ஆசிய கிண்ணத்தை வென்ற பங்களாதேஷ் அணி!

IPL – லசித் மாலிங்க விலகல்

5 வது முறையாக பட்டத்தை வென்ற ஜோன்