உள்நாடு

நாட்டில் 60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருமானம் வீழ்ச்சி!

(UTV | கொழும்பு) –

91 சதவீதமான குடும்பங்களின் மாத செலவுகள் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக, 60 சதவீதத்துக்கும் அதிகமான குடும்பங்களின், மாத வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி நிலைமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய ஆய்வுகளில் இது உறுதியாகியுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் பிரகாரம் நாட்டில் 60.5 சதவீதமான குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், 91 சதவீதமான குடும்பங்களின் மாத செலவுகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த ஆய்வு தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அங்கொட லொக்காவின் சகா ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

வைத்தியசாலைகளில் எக்ஸ்ரே பரிசோதனைகள் இடைநிறுத்தம்!

அரச – தனியார் பேரூந்துகளில் பொருட்களை விற்பனை செய்யத் தடை