உள்நாடு

கண்டியில் இரு மரங்கள் முறிந்து விழுந்ததில் வாகனங்களுக்கு பலத்த சேதம், இருவர் காயம்!

(UTV | கொழும்பு) –

கண்டி, திலக் ரத்நாயக்க மாவத்தையில் இரண்டு பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 வாகனங்கள் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இன்று காலை 11 மணியளவில் அடுத்தடுத்து இருந்த இந்த மரங்களே இவ்வாறு வீழ்ந்துள்ளன. கனமழை காரணமாக இந்த மரங்களின் வேர்கள் அழுகிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனால், அந்த இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறிகள், கார்கள், வேன்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட 8 வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளதுடன்,காயமடைந்த இருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.      

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் அதிக மழை? வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பு

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் கைது