உள்நாடு

வெளிநாட்டு ஆசையால் ஏமாறும் மக்கள் – பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) –

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பல மோசடி கும்பல்களால் கோடிக்கணக்கான பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணத்தின் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வாரங்களில் பத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முறைப்பாடுகளின் அடிப்படையில் சுமார் இரண்டரை கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பியே பணத்தினை இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொவிட் தொற்றால் மேலும் 47 பேர் பலி

தேர்தல் மத்திய நிலையங்களை தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை

“எதிர்காலத்தில் மின்வெட்டு இருக்காது” – கம்மன்பில