உள்நாடு

ஷாபியை நாசமாக்கிய சன்ன ஜயசுமனவை SJBக்குள் எடுக்க ரிஷாட், மனோ கடும் எதிர்ப்பு!

(UTV | கொழும்பு) –

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இருந்து பிரிந்து சென்று டளஸ் அழஹப்பெரும தலைமையில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்து செயற்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர் விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜி எல் பீரிஸ் , நாலக கொடஹேவா , டிலான் பெரேரா , வஸ்ந்த பண்டார , சன்ன ஜயசுமன, குமாரசிரி ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி எல் பீரிசுக்கு கட்சி உயர் பதவி ஒன்று வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில் ஏனையோருக்கு அமைப்பாளர்கள் பதவி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த நல்லாட்சி காலத்தில் டொக்டர் ஷாபி விடயத்தை கையில் எடுத்த சன்ன ஜயசுமனவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைக்க ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சி தலைவர்களான மனோ கணேசன் மற்றும் ரிஷாத் பதுர்டீன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நிறை குறைந்த பாண் விற்பனை | 100 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு !

விவசாய நிலங்களில் கால் பதித்த இராணுவம்

விபத்தில் பலியான பாடசாலை மாணவன்!