(UTV | கொழும்பு) –
இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகராக நியமனம் பெற்றிருக்கும் சன்தோஷ் ஜா (Santosh Jha) இன்று ஜனாதிபதியிடம் தனது நற்சான்றுப் பத்திர்ததை கையளித்தார்.
சன்தோஷ் ஜா இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமனம் பெறுவதற்கு முன்னதாக 2020 ஜூலை மாதத்திலிருந்து 2023 டிசம்பர் வரையில் பிரசல்ஸ் நாட்டுக்கான இந்திய தூதுவராக சேவையாற்றினார். இந்தியா – இலங்கை மற்றும் இந்திய – ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்வதற்கான பேச்சுவார்தை குழுகளிலும் சன்தோஷ் ஜா அங்கம் வகித்துள்ளார்.
இந்திய, இலங்கைக்கு இடையில் காணப்படும் நீண்டகால பொருளாதார, கலாசார மற்றும் சமூக தொடர்புகளை பலப்படுத்திக்கொள்ள அர்பணிப்பதாக ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டிருந்த விருந்தினர் பதிவேட்டில் சன்தோஷ் ஜா குறிப்பிட்டுள்ளார். இந்தியா – இலங்கை வரலாற்று நட்பை மேலும் பலப்படுத்தவும் வர்த்தக, முதலீட்டு, வலுசக்தி உள்ளிட்ட பல துறைகளில் காணப்படும் நெருங்கிய ஒத்துழைப்புக்களை மேம்படுத்திக்கொள்ளவும் அர்ப்பணிப்பதாக புதிய இந்திய உயர்ஸ்தானிகள் தெரிவித்தார்.
இருநாட்டு தலைவர்களும் ஏற்றுக்கொண்ட “தெரிவு”க்கு அமைய செயற்படுவதே தனது எதிர்பார்ப்பாகும் என்றும் இருநாடுகளினதும் ஒத்துழைப்பு, நெருங்கிய நட்பு என்பனவே வலயத்தின் முன்னேற்றம், நிலைப்புத் தன்மைக்கு காரணமாக அமைந்துள்ளது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
சுகாதார மற்றும் தொழிற்சாலைகள் அமைச்சரும் பதில் வெளிவிவகார அமைச்சருமான ரமேஸ் பத்திரன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්