(UTV | கொழும்பு) –
வணிக நிறுவனங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் பணியாற்றும் அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்குவது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தனவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில், திறைசேரி போனஸ் வழங்குவதற்கு பணம் ஒதுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், முந்தைய ஆண்டில் வரி செலுத்திய பின்னர் இலாபத்தில் 30 சதவீதத்தை ஒருங்கிணைந்த நிதிக்கு செலுத்திய அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படலாம்.
ஆனால் இலாப நோக்கற்ற அரச வர்த்தக நிறுவனங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்க வேண்டாம் என திறைசேரி அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්