உள்நாடு

UPDATE = ஜனாதிபதியால் புதிய செயலாளர்கள் நியமனம்!

(UTV | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பத்து அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்களையும் இரண்டு மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்களையும் சற்று முன்னர் நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வருகிறது.

நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக ஏ. சி. மொஹமட் நஃபீல், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் மாகாண அலுவல்கள் அமைச்சின் செயலாளராக பி. பி.யசரத்ன, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக சமன் தர்ஷன பாடிகோராள ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வி அமைச்சின் செயலாளராக திருமதி வசந்தா பெரேரா, நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளராக என். எம். ரணசிங்க, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக குணதாச சமரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் . சுற்றாடல் அமைச்சின் செயலாளராக பி. கே. பி. சந்திரகீர்த்தி, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளராக கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் ரஞ்சித் ரூபசிங்க, தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக கலாநிதி தர்மசிறி குமாரதுங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் .

 

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தேசியப் பட்டியல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி தீர்மானம் இன்று

editor

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

இயல்பு வாழ்க்கையை வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி ஆராய்வு