உள்நாடு

போதைப் பொருட்களுடன் இருவர் சம்மாந்துறை பொலிஸாரால் கைது!

(UTV | கொழும்பு) –

நாடு பூராகவும் விசேட போதை பொருள் ஒழிப்பு திட்டத்தை அமுல்படுத்தும் வகையில் பதில் பொலிஸ் மா அதிபரின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம ஆலோசனையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் வழிகாட்டலில் பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே. சதீஷ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இரு சந்தேக நபர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போதை சுற்றி வளைப்பின் போது 6600 மில்லி கிராம் ஐஸ் உட்பட 260 போதை தரும் மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவரும் 40 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேக நபரும் கைதாகினர். இச்சுற்றிவளைப்பானது கடந்த நேற்று இரவு சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தை அண்டிய பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

   

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கட்டுநாயக்கவிலிருந்து மெல்போர்ன் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானம் இரத்து

editor

நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுலுக்கு [VIDEO]

சுழற்சி முறையில் இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு