(UTV | கொழும்பு) –
‘‘சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்வதற்காக முன்வைக்கப்பட்ட யோசனை மற்றும் நிலைப்பா டுகளை நடைமுறைப்படுத்துவதற்கு தொடர்ந்து காலதாமதம் ஏற்பட்டால் ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்போம்’’ என்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவில் இதுதெடார்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் செயலாளர் ஹரித்த அளுத்கே தெரிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2022ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து இதுவரையில் 1700 இற்கும் அதிகமாக விசேட வைத்தியர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ள துடன் மேலும் 5,000இற்கும் அதிகமான வைத்தி யர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கான ஆபத்து நிலைமை இருப்பதாக அச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. வைத்தியர்களின் தட்டுப்பாட் டின் காரண மாக 20 இற்கும் அதிகமான சிறியளவான வைத்தியசாலைகள் முழுமையாக மூடப்பட்டுள்ளதுடன் மேலும் 400இற்கும் அதிகமான வைத்தியசாலைகளும் விசேட வைத்திய பிரிவுகளும் முடங்குவதற்கான எச்சரிக்கை நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆரம்பிக்கப்பட்ட சில பணிப்புறக்கணிப்புகள் இதுவரையில் முன்னெடுக்கப்பட்டே வருகின்றன. அதிகாரிகளிடமிருந்து சரியான பதில் கிடைக்காவிட்டால் முதலாம் திகதியிலிருந்து மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பமாகும் என்றார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්